Editorial / 2019 ஒக்டோபர் 16 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவை கடந்த இரண்டு நாட்களில் உலுக்கிய இரண்டாவது கொலைச் சம்பவமாக, தென்மேற்கு குரெரோ மாநிலத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும், ஆயுதந்தரித்த பொதுமக்களுக்குமிடையிலான துப்பாக்கிச் சண்டையொன்றில் 15 பேர் நேற்று கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு 43 மாணவ ஆசிரியர்கள் காணாமல் போனதுக்காக அறியப்படுகின்ற இகுவாலா நகரத்துக்கு அருகிலுள்ள டெபோஷியா மாநகரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 14 பொதுமக்களும், ஒரு படைவீரரும் இறந்ததாக குரெரோ மாநில பொதுமக்கள் பாதுகாப்புப் பேச்சாளர் றொபேர்ட்டோ அல்வரேஸ் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், குறித்த சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற புகைப்படமொன்றில் அப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் ரோந்தில் ஈடுபடுகின்ற நிலையில் இரண்டு பொதுமக்களின் சடலங்கள் காணப்படுவதோடு, ஒன்று ட்ரக்கொன்றில் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்தபடி தொங்கிய நிலையில் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில், அயல் மேற்கு மாநிலமான மிசோகானில் குற்றவியல் குழு துப்பாக்கிதாரிகளெனச் சந்தேகிக்கப்படுபவர்களால் நேற்று முன்தினம் 13 பொலிஸார் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து தனது பாதுகாப்பு உத்தியை நியாயப்படுத்தியிருந்த மெக்ஸிக்கோ ஜனாதிபதி அன்ட்ரேஸ் மனுவல் லொபேஸ் ஒப்ரேட்டர், மெக்ஸிக்கோவின் மோசமான வன்முறைக்கு முன்னைய அரசாங்கங்களைச் சாடியிருந்தார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago