2025 மே 14, புதன்கிழமை

மேல்தாடையை இழந்த பெண் முதலை

Freelancer   / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது இரையை தேடிப் பிடித்துக் கடித்துச் சாப்பிடத் தேவையான தாடைகளில் மேல்தாடையை இழந்த முதலை ஒன்று காட்டர்லேண்ட் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நடுக்காட்டில், மேல்தாடையை இழந்த பெண் முதலை ஒன்று இருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து, அது மீட்கப்பட்டு, ஃப்ளோரிடாவில் உள்ள காட்டர்லேண்ட் உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ளது.

மேல்தாடை இழந்து, பயங்கர காயத்துடன் இருந்த முதலை, காட்டிலேயே இருந்தால் அது சாப்பிட முடியாமல் பலியாகும் அபாயம் இருந்ததால், உடனடியாக அது மீட்கப்பட்டு உயிரியல் பூங்காவில் விடப்பட்டது.

அதன் காயம் சுகமடைந்த நிலையில், பூங்கா நிர்வாகம் வழங்கும் உணவுகளை முதலை சாப்பிட ஆரம்பித்துள்ளது.

அது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .