Freelancer / 2024 டிசெம்பர் 18 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொசாம்பிக் நாட்டில் ஏற்பட்ட “சிடோ” சூறாவளியால், 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூறாவளியால், நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சூறாவளியால் மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 34 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன், 319 பேர் காயமடைந்துள்ளனர்.
சூறாவளியால், 25 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆபத்து மேலாண்மை மற்றும் குறைப்புக்கான தலைவர் லூயிசா மெக் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று (15), கபோ டெல்கடோ மாகாணத்தில் உள்ள மெகுபி மாவட்டத்தில் சூறாவளி கரையை கடந்தது. தொடர்ந்து, திங்கட்கிழமையும் (16) சூறாவளி தாக்கம் இருந்தது.
அடைமழை மற்றும் பலத்த காற்று வீசியதில் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன.
சூறாவளியால் இதுவரை 23,600 வீடுகள் மற்றும் 170 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.
சூறாவளி, சிம்பாப்வே நாட்டுக்கு அருகே, செவ்வாய்க்கிழமை (17) மாலை வலுவிழக்கும் என கூறப்பட்டது. சூறாவளியால் சிம்பாப்வே நாடும் பாதிக்கப்பட கூடும் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளது.
30 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago