R.Tharaniya / 2025 ஜூலை 28 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன்-ரஷ்யா இடையே 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன.
அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ராணுவ உதவியை வழங்கி வருகிறது. எனவே இரு நாடுகள் இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்க்யாங் இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் இதன் பயண நேரம் சுமார் 10 நாட்கள் ஆகும்.
இதனால் நேரடி விமான சேவை தொடங்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வந்தன. அந்தவகையில் தற்போது மாஸ்கோ-பியாங்க்யாங் இடையே நேரடி விமான சேவை நேற்று தொடங்கியது. இந்த விமானம் வாரத்துக்கு 2 முறை இயங்கும் என ரஷிய விமான போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளது.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025