2025 மே 15, வியாழக்கிழமை

ரிமோட் கன்ட்ரோல் மூலம் குட்டி காரை இயக்கி உலக சாதனை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீபகாலமாக இளைஞர்கள் பல்வேறு வகைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில், ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை 152 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி இங்கிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் வோம்ஸ்லி என்ற வாலிபர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இவர் தயாரித்த கார் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும். ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த கார் ஜெட் என்ஜின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரிமோட் கன்ட்ரோல் மூலம் குறைவான வேகத்தில் தான் கார்களை இயக்க முடியும். ஆனால் ஜேம்ஸ் வோம்ஸ்லி மணிக்கு 152.50 கிலோ மீட்டர் வேகத்தில் கார்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 இதற்கு முன்பு யாரும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இந்த வேகத்தில் கார்களை இயக்கியது இல்லை. இதற்கு முன்னர் அவர் 137 கிலோ மீட்டர் வேகத்தில் ரிமோட் மூலம் குட்டி காரை இயக்கி இருந்தார். அப்போது அதில் சில பகுதிகள் உடைந்தது. பின்னர் அதனை சரி செய்து 141 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கினார். இதைத்தொடர்ந்து 3-வது முறையாக தற்போது 152.50 கிலோ மீட்டர் வேகத்திற்கு இயக்கி சாதனை படைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .