2024 ஒக்டோபர் 13, ஞாயிற்றுக்கிழமை

லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது

Editorial   / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் திகதி ரஷியா விண்ணில் செலுத்தியது.

 இந்த விண்கலத்தை நாளை (21)  நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது.  கடந்த 17ம் திகதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷிய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன.

இந்தியாவுக்கு போட்டியாக ஏவப்பட்ட ரஷிய விண்கலம் நிலவில் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக ரஷிய விண்வெளி நிறுவனம் கூறியது.

இந்தந்லையில் நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது. லூனா 25- விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்தது.

லூனா 25-ன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் போது நேற்றைய தினம்  தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவில் மோதியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .