Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகதிகளால் நிரம்பியிருந்த படகொன்று லிபியக் கரையோரத்தில் மூழ்கி, நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என தாம் அஞ்சுவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.
100க்கும் அதிகள் இழந்தது குறித்து அச்சப்படுவதற்கு ஒவ்வொரு காரணத்தையும் தாங்கள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொருவரும் உறுதியாக அறிய முடியாதென டுவிட்டரில் அறிக்கையொன்றில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில், லிபியக் கரையோரக் காவற்படையினரின் கருத்தை உடனடியாகப் பெற்றிருக்க முடிந்திருக்கவில்லை.
கடலில் பயணிக்க முடியாத படகுகளில் ஐரோப்பாவை பெரும்பாலாக அடைய முயலும் அகதிகளுக்கான மய்யமாக லிபியா காணப்படுகின்றது.
எரித்திரியா மற்றும் ஏனைய சஹாரா பாலைவனத்துக்கு தெற்காகவுள்ள நாடுகள், அரேபிய நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 250 பேரைக் காவிச் சென்ற படகொன்று, லிபியத் தலைநகர் திரிபோலிக்கு கிழக்காகவுள்ள கொஸ்மோஸுக்கருகில் கவிழ்ந்திருந்தது.
லிபியக் கரையோரக் காவற்படையினரும், உள்ளூர் மீனவர்களும் 134 பேரை மீட்டிருந்த நிலையில், 115 பேரளவில் காணாமல் போன நிலையில், மத்தியதரைக்கடலில் உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை இவ்வாண்டில் 600ஐத் தாண்டியிருந்தது.
3 minute ago
13 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
20 minute ago
24 minute ago