2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

வங்கதேசத்தில் மேலும் ஓர் இந்து நபர் சுட்டுக் கொலை

Editorial   / 2025 டிசெம்பர் 31 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபு தாஸ் மற்றும் அம்ரித் மொண்டலுக்குப் பிறகு, வங்கதேசத்தில் இஸ்லாமிய கும்பலால் மற்றொரு இந்துவான பஜேந்திர பிஸ்வாஸ் என்பவர் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை எழுப்பியுள்ளது.

வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆடைத் தொழிற்சாலையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரிந்த ஓர் இந்து ஊழியர் பஜேந்திர பிஸ்வாஸ் (42), சக ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில், பலுகா உபஜிலா பகுதியில் அமைந்துள்ள லபிப் குழுமத்திற்குச் சொந்தமான சுல்தானா ஸ்வெட்டர்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் நடந்தது.

இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட நோமான் மியா (29) என்பவரும் அதே பிரிவில் பணிபுரிந்து வந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X