Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனானில் அண்மைக்காலமாக கடும் நிதி நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந் நாட்டு மக்கள், வங்கிகளில் இருக்கும் தங்களின் வைப்புத்தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை மாத்திரம் எடுக்கும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஒரு வங்கியில் 2 ,10,000 டொலர்களை வைப்பு தொகையாக வைத்துள்ள இளைஞர் ஒருவர் மருத்துவ செலவுகளுக்காகப் பணம் எடுக்க வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால் அவர் அதிக தொகையை கேட்டதால் வங்கி ஊழியர்கள் பணம் வழங்க மறுத்துவிட்டனர்.
இதனால் கோபத்துடன் வங்கியை விட்டுச் சென்ற அந்நநபர், கையில் துப்பாக்கியுடன் மீண்டும் வங்கிக்கு வந்தார். பின்னர் தான் கேட்ட தொகையைத் தரும்படிக் கூறி வங்கி ஊழியர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்தார். இதனால் அப் பகுதயில் பெரும் பரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் வங்கி ஊழியர்களை சிறைப்பிடித்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு இளைஞருக்கு 35,000 டொலர்களை வழங்க வங்கி அதிகாரிகள் சம்மதித்தனர்.
அதைத் தொடர்ந்து சுமார் 6 மணி நேரமாக சிறைப்பிடித்து வைத்திருந்த ஊழியர்களை அவர் விடுவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .