Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

குர்திஷ்களின் கட்டுப்பாட்டிலுள்ள வடகிழக்கு சிரியா மீதான நீண்ட காலம் எச்சரித்த ஒரு தாக்குதலை துருக்கி ஆரம்பித்துள்ள நிலையில், எல்லைப் பிராந்தியத்தில் தாக்குதல் ஜெட்கள் குண்டுத் தாக்குதல் நடத்திய சில மணித்தியாலங்களில் வடகிழக்கு சிரியாவில் தரைவழி வலிந்த தாக்குதலொன்றை துருக்கியப் படைகள் ஆரம்பித்துள்ளன.
யுப்ரேட்டஸ் நதியின் கிழக்காகவுள்ள சிரிய எல்லையை நட்புறவு சிரிய எதிரணிப் படைகளுடன் தமது படைகள் கடந்ததாக துருக்கியின் பாதுபாப்பமைச்சு அறிக்கையொன்றில் நேற்றிரவு தெரிவித்துள்ளது.
வான், ஆட்லறித் தாக்குதல்களைத் தொடர்ந்தே தரைவழி நகர்வு இடம்பெற்றிருந்த நிலையில், 181 பயங்கரவாத நிலைகளைத் தாம் தாக்கியதாக துருக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த நடவடிக்கையை நேற்று ஆரம்பிக்கையில், தமது தென் எல்லையில் பயங்கரவாதப் பாதையை உருவாக்குவதைத் தடுப்பதுடன், அப்பகுதியில் அமைதியைக் கொண்டு வருவதே துருக்கியின் இலக்கு என துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவான் தெரிவித்துள்ளார்.
குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளை எல்லைப் பிராந்தியத்திலிருந்து அகற்ற ஜனாதிபதி தயீப் எர்டோவான் விரும்புகின்றார். ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கெதிரான மோதலில் ஐக்கிய அமெரிக்காவின் பிரதான கூட்டணி சிரிய ஜனநாயகப் படைகள் என்றபோதும், சட்டரீதியற்ற குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியுடனான சிரிய ஜனநாயகப் படைகளின் தொடர்புகளால் சிரிய ஜனநாயகப் படைகளின் போராளிகள் பயங்கரவாதிகளாக துருக்கியால் நோக்கப்படுகின்றனர்.
இதேவேளை, துருக்கியில் தற்போதுள்ள 3.6 மில்லியன் அகதிகளில் சிலர் மீளக்குடியமர்த்தக்கூடிய சிரியாவுக்குள் 30 கிலோ மீற்றர் வரை உட்செல்லும் பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்கவும் ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவான் விரும்புகின்றார்.
இந்நிலையில், துருக்கியின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் சுதந்திர சிரிய இராணுவத்தைச் சேர்ந்த 14,000 போராளிகள் சிரியாவின் வடமேற்கிலிருந்து சென்றுள்ளதாக துருக்கியின் டெமிரொரென் செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago