Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூலை 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியாவில் (North Korea) கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைக் கருத்தில் கொண்டு வடகொரியத் தலைவர் கிங் ஜாங்-உன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், சினுஜு மற்றும் உய்ஜு பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், கடந்த சனிக்கிழமையன்று பெய்த கனமழையால் வட கொரிய-சீன எல்லையில் உள்ள ஒரு நதி ஆபத்தான அளவைத் தாண்டியதுடன் “கடுமையான நெருக்கடியை" உருவாக்கியது என்று அதிகாரபூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .