2023 மார்ச் 30, வியாழக்கிழமை

வன்முறையில் இம்ரான் ஆதரவாளர்கள்; பாகிஸ்தானில் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 மார்ச் 15 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம் இம்ரான்கானின் தலைமையிலான அரசு  கவிழ்ந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.

 எனினும் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் எனவே விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் இம்ரான் தனது ஆதரவாளர்களுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அதேவேளை, இம்ரான்கான் மீது ஊழல், பொலிஸாருக்கு மிரட்டல் விடுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பரிசுப்பொருட்கள் பெற்றது தொடர்பாக வருமான கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கானை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

 இதையடுத்து இம்ரான்கானைக் கைது செய்ய நேற்றுமுன்தினம்  லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு பொலிஸார் சென்றிருந்தனர். இதன்போது பொலிஸாருக்கும் இம்ரான்கானின்  ஆதரவாளர்களான பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சப் கட்சியினருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டது.

இம் மோதலால் இம்ரான்கனைக்  கைது செய்யும் பொலிஸாரின் முயற்சி தோல்வியடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .