Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 02 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்சில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதால் அந்நாடே கடந்த சில நாட்களாக வன்முறைக் காடாக மாறியுள்ளது. அங்கு வன்முறை மெல்ல மெல்ல குறைந்து வரும் சூழலில் சிறுவனின் இறுதிச்சடங்குகள் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளன.
ஆனால், மற்ற இடங்களில் நீடிக்கும் வன்முறையில் கடைக்குள் புகுந்து வன்முறையாளர்கள் துப்பாக்கிகளை திருடிச்சென்றது அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீடிக்கும் வன்முறை தொடர்பாக இதுவரை 2,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமையைக்கட்டுப்படுத்த தலை நகர் பாரிஸ் புற நகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலை நகரில் இரவு நேரங்களில் டிராம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நஹெல் என்ற சிறுவன் அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்டவர். பிரான்சில் வெடித்தவன் முறை அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவியுள்ளது. அங்கும்வன் முறையை தூண்டுவதாக கொத்துக்கொத்தாக பலரையும்பொலிஸார் கைது செய்துவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago