2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கனடாவில் வாடகை வீட்டில் வசித்து வரும் குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு, அந்நாட்டு அரசு 50 டொலர்கள் உதவித்தொகையாக  வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் உதவித்தொகையைப்  பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 15 வயது உடையவர்களாகவும், 2022 -ஆம் வருடத்தில் தங்கள் 2021 -ஆம் ஆண்டு வருவாயில் 30 சதவீதத்தையாவது வாடகையாகச்  செலுத்தி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் 35,000 டொலர்கள் அல்லது அதற்கு குறைவான வருவாய் கொண்ட குடும்பங்களாகவோஅல்லது 20,000 டொலர்கள் அல்லது அதற்கு குறைவான வருவாய் கொண்ட தனிநபராகவோ இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2021 -ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும் எனவும், இதற்கு தகுதியுடையவர்கள் பெடரல் அரசின் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தாம் வாடகை செலுத்துவதற்கான ஆதாரத்தையும் அதனுடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X