2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வானவில் நிற ’காதணி’ அணிந்த பெண்ணுக்கு சிறை

Mithuna   / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வானவில் நிறத்தில் காதணி அணிந்த பெண்ணுக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. ரஷ்யாவின் நிஸ்னி நவ்ஹொராட் பகுதியை சேர்ந்த அனஸ்டசியா எர்ஷொவா பொது இடத்தில் வானவில் நிறத்திலான காதணி அணிந்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்த பொலிஸார் கடந்த வாரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய நீதிமன்றம் எர்ஷொவாவுக்கு 5 நாட்கள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரஷ்யாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் அதன் ஆதரவு செயல்பாடுகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் உத்தரவில் தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ரஷ்ய அரசு ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X