Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) வேட்பாளராக நா. புகழேந்தி போட்டியிடுவார் என அக்கழகத் தலைமை இன்று (24) அறிவித்துள்ளது.
தி.மு.க தலைமையகமான அறிவாலயத்தில் தனது தலைமையில் இன்று காலை இடம்பெற்ற நேர்காணலைத் தொடர்ந்தே விக்கிரவாண்டித் தொகுதிக்கான வேட்பாளரை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இது குறித்து தமிழ்நாடு சட்டசபையின் எதிர்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற தி.மு.க வேட்பாளராக நா. புகழேந்தி போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
தி.மு.கவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக இருப்பவர் நா. புகழேந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டு, நான்குனேரி சட்டசபைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21ஆம் திகதி இடைத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க போட்டியிடவுள்ள நிலையில் நேற்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டிருந்தன.
அந்தவகையில், தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டு தொகுதியில் போட்டியிட வேண்டும் என இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபை உறுப்பினர் பொன். கெளதம சிகாமணி விருப்ப மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago