2025 மே 16, வெள்ளிக்கிழமை

விமான எஞ்சினுக்குள் இழுக்கப்பட்ட பணியாளர் பலி

Janu   / 2023 ஜூன் 28 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நின்று கொண்டிருந்த விமானத்தின் எஞ்சினுக்குள் இழுக்கப்பட்ட விமான நிலைய பணியாளர் ஒருவர் உடல் சிதைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் விமான நிலையத்தில்   இந்த சம்பவம் நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து சான் ஆன்டோனியோ, டெக்சாஸ் விமான நிலையத்திற்கு டெல்டா நிறுவனத்தை சேர்ந்த விமானம் வந்திறங்கியது.

பயணிகள் இறங்கிய பின்னரும், விமானத்தின் ஒரு எஞ்சின் சுற்றிக் கொண்டே இருந்துள்ளது. இதனை யூனிஃபை நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் சரியாக கவனிக்கவில்லை.

அவர் விமானத்தின் அருகே சென்றபோது அதிக அழுத்தம் காரணமாக பணியாளரை எஞ்சின் உள்ளே இழுத்துக் கொண்டது. இந்த சம்பவத்தில் அவர் உடல் சிதைந்து உயிரிழந்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .