Ilango Bharathy / 2022 டிசெம்பர் 08 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆராய்ச்சி என்ற பெயரில் அதிகளவானவிலங்குகளைக் கொன்று குவித்து வருவதாக டெஸ்லா , நியூராலிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்கின் மீது (Elon musk) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எலோன் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனமானது கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்துவதற்கான பரிசோதனை செய்து வருகிறது.

இப் பரிசோதனைக்காக இதுவரை செம்மறி ஆடுகள், பன்றிகள், குரங்குகள் என சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் , அவை கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு உயிரிழப்புகளை சந்திப்பதாகவும் அந் நிறுவன ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.
இப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமெரிக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
30 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
30 minute ago
34 minute ago