R.Tharaniya / 2025 நவம்பர் 02 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உட்பட பல்வேறு பொருட்களுக்கும் ஜனாதிபதி ட்ரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தினார்.
இதை சரி செய்ய இரு நாடுகள் இடையேயும் வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.இதற்கிடையே கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1987ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ஒரு உரையில், வரிகள் ஒவ்வொரு அமெரிக்க தொழிலாளி மற்றும் நுகர்வோரையும் பாதிக்கும் என்றும் கடுமையான வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்றும் பேசியிருந்தார்.
இந்த வீடியோவை இணைத்து கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரொனால்ட் ரீகனின் உரை தவறாக சித்திரிக்கப்பட்டதாகவும், வீடியோவை பயன்படுத்த தங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை கூறியுள்ளது.
இதற்கிடையே பொய்களைப் பரப்புவதாகக் கூறி ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ட்ரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இந்நிலையில், கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ட்ரம்ப், "கனடா அதிபர் மார்க் கார்னி என் நல்ல நண்பர்தான். கனடா எனக்கு மிகவும் பிடிக்கும்.
கனடா வெளியிட்ட போலியான விளம்பரம் எனக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
9 minute ago
12 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
4 hours ago
5 hours ago