2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை

R.Tharaniya   / 2025 ஜூலை 03 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்​கதேசத்​தில் பிரதம​ராக இருந்த அவாமி லீக் கட்​சித் தலை​வர் ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்த ஆண்டு மாணவர்​கள் தொடர் போராட்​டம் நடத்​தினர். இது வன்​முறை​யாக மாறிய தையடுத்​து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைந்​தது.

இதையடுத்​து, சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யத்​தில் (ஐசிடி) ஹசீனா மீது பல்​வேறு வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன. இந்த வழக்கை விசா​ரித்த தீர்ப்​பா​யம் ஹசீனா ஆஜராக உத்​தர​விட்​டது. ஆனால் அவர் ஆஜராக​வில்​லை. இதையடுத்து நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், ஐசிடி-​யின் தலை​வர் நீதிபதி முகமது குலாம் முர்​துசா மஜும்​தார் தலை​மையி​லான 3 பேர் அடங்​கிய அமர்​வு, நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் ஹசீ​னா​வுக்கு 6 மாதம் சிறை தண்​டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்​கியது. வங்​கதேசத்​திலிருந்து தப்​பிய பிறகு ஹசீ​னா​வுக்கு சிறை தண்​டனை வழங்​கப்​பட்​டிருப்​பது இது​தான் முதல் முறை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .