Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியிலுள்ள ஷீஷா அருந்தகங்களை இலக்கு வைத்த சூடுகளில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சூடுகளை தொடர்ந்து நேற்றிரவு பாரிய தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று பின்னர் துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படுபவர் இறந்தபடி அவரின் வீட்டில் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
பிராங்ஃபேர்ட்டிலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஹனனுவிலுள்ள இரண்டு அருந்தகங்களிலேயே இத்தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணியளவில் மிட்நைட் அருந்தகத்தில் முதலாவது தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. அருந்தகத்தின் கட்டதுக்கு முன்னால் மூன்று பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்திருந்தது.
பின்னர் பொலிஸாரின் தகவல்படி தாக்குதலாளி காரில் சம்பவ இடத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
அரீனா அருந்தகத்தில் இரண்டாவது சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அழைப்பு மணியை அடித்து விட்டு புகைக்கும் பகுதியிலிருந்தவர்களை துப்பாக்கிதாரி சுட்டு பெண்ணொருவர் உள்ளடங்கலாக ஐவரைக் கொண்டதாக உள்ளூர் பத்திரிகையான பில்ட் தெரிவித்துள்ளது.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago