Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்ததாக, ஷேக் ஹசீனா கூறிய குற்றச்சாட்டை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் மறுத்துள்ளார்.
வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், “வங்கதேசத்தில் இருந்து நான் வெளியேறுவதற்கு அமெரிக்கா காரணம்” என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது, “எங்களுக்கும், வங்கதேசத்தில் நடந்த வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தான் காரணம் என சொல்வது முற்றிலும் பொய். அரசின் எதிர்காலத்தை வங்கதேச மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஹசீனா அரசு எடுத்த கடுமையான அடக்குமுறை நடவடிக்கைதான், போராட்டத்தை தீவிரப்படுத்தியது. ஷேக் ஹசீனா அரசு மாணவர்களை கடுமையாக ஒடுக்கியது. வங்கதேசத்தில் இந்துகள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க இடைக்கால அரசு எடுக்கும் முயற்சிகளை உன்னிப்பாக கவனிக்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .