2025 மே 14, புதன்கிழமை

ஸ்கை டைவிங் மூதாட்டி மரணம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அமெரிக்காவில் 104 வயது மூதாட்டியான டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ம் திகதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கை டைவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் இருந்து 13,500 அடி உயரத்திலிருந்து டோரத்தி குதித்து சாதனை படைத்தார்.இதனையடுத்து, அவர் உலகின் மிகவும் மூத்த ஸ்கை டைவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

இந்நிலையில், கின்னஸ் சாதனை படைத்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில், மூதாட்டி டோரத்தி உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .