Freelancer / 2025 மார்ச் 06 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னதாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில், காசாவில் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக, இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"இந்த விடயத்தில் இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பாருங்கள், அமெரிக்க மக்களின் நலனுக்காக உலகெங்கிலும் உள்ள மக்களுடன் உரையாடலும் பேச்சு வார்த்தையும் சரியானது என்று ஜனாதிபதி நம்பும் ஒன்று," என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹமாஸ் அதிகாரிகள் குழுவினர், புதன்கிழமை (5) அமெரிக்க தூதருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினர்.
"ஹமாஸுக்கும் பல்வேறு அமெரிக்க தரப்பு அதிகாரிகள் இடையே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. சமீபத்திய பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க தூதருடன், அமெரிக்க குடியுரிமை பெற்ற இஸ்ரேலிய கைதிகள், உயிருள்ளவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
18 minute ago
29 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
32 minute ago
39 minute ago