Editorial / 2026 ஏப்ரல் 08 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடக்கும் கப்பல்களுக்குப் பெரும் தொகையை கட்டணமாக வசூலிக்க ஈரான் தீர்மானித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது. இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்து முடங்கியது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்திருந்தார். இக்காலக்கெடு இன்று அதிகாலை 5.30 மணியுடன் நிறைவடையவிருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த இடைக்காலப் போர் நிறுத்தக் காலத்தில் ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஈரானின் புதிய நிபந்தனை:
போர் நிறுத்த நிபந்தனைகளில் ஒன்றாக, ஹார்முஸ் நீரிணையை கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் (இலங்கை ரூபாவில் 62 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்) கட்டணமாக வசூலிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யவே இக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதில் ஒரு பகுதியை ஓமன் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இக்கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே ஈரானின் பிரதான நிபந்தனையாகக் காணப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .