Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ஹர்யானாவில் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஹர்யானாவில் சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையிலேயே கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே இரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில், மாயாவதி மற்றும் ஹர்யானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹுடா இரகசியமாக நேற்று முன்தினமிரவு சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
அரை மணித்தியாலத்துக்கு மேலாக நடந்த இக்கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவும் இருந்துள்ளார்.
பாரதிய ஜனதாக் கட்சி ஆளும் ஹர்யானாவில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் கூட்டாக போட்டியிட இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.
24 minute ago
31 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
41 minute ago
48 minute ago