2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஹொங் கொங் பொலிஸாரால் துப்பாக்கி, நீர்த்தாரை பிரயோகம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொங் கொங்கில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில், ஹொங் கொங் பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிப் பிரயோகமொன்றை மேற்கொண்ட நிலையில், இவ்வாண்டு ஜூன் மாதம் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்த பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது நோக்கப்படுகிறது.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகளை தடி, பொல்லுகளால் தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிகளை வேறு சில அதிகாரிகள் காண்பிப்பதை புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இன்னொரு முதலாவதாக, இவ்வாண்டு ஜூன் மாதம் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்த பின்னர், நேற்றுக் காலையில் ஆர்ப்பாட்டக்கார்களுக்கெதிராக நீர்த்தாரைப் பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

சுயென் வான் மாவட்டத்திலேயே நேற்று  ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்திருந்த நிலையில், பின்னர் அது சிம் ஷா சுய் மாவட்டத்துக்கு பரவியிருந்தது.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் விளைவாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொங் கொங் பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், அதில் மிகவும் வயது குறைந்தவராக 12 வயதான சிறுவனும் உள்ளடங்குகின்றான்.

சீனாவுக்கு கைதிகளை நாடு கடத்தும் சட்டமூலத்தால் தோன்றிய ஆர்ப்பாட்டங்கள் பின்னர் ஹொங் கொங் அரசாங்கத்துக்கெதிரான பரவலான ஆர்ப்பாட்டங்களாக அவை மாற்றமடைந்ததுடன், நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் அவை மேலும் தீவிரமடைவதை உணர்த்துகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கான எச்சரிக்கையொன்றாகவே துப்பாக்கி வேட்டுத் தீர்க்கப்பட்டதாக உள்ளூர் ஊடகத்திடம் பொலிஸார் தெரிவித்ததோடு, மோதல்களால் சில அதிகாரிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X