2025 மே 19, திங்கட்கிழமை

1 லீற்றர் எண்ணெய்க்கு 1 லீற்றர் பீர்

Ilango Bharathy   / 2022 ஜூலை 19 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக அளவில் சூரியகாந்தி எண்ணெயின் ஏற்றுமதிக்கு உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்  80 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறன.

எனினும் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற வரும் போர் காரணமாக சமையல் எண்ணெய் விநியோகம் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளிள் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், போர் தொடங்கியதில் இருந்து பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் சமையல் எண்ணெய் இல்லை எனவும்,மேலும் பல கடைகளில் சமையல் எண்ணெய்கள் கெடுபிடிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க ஜேர்மனியின் முனிச் நகரில் ஜிசிங்கர் மதுபான சாலை மேலாளர்கள் அதிரடி  அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.
அதாவது, 1 லீற்றர் சூரியகாந்தி எண்ணெய்யை கொடுத்து, அதே அளவு பீரை வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

வெளிச்சந்தையில் 1 லீற்றர் பீரின்  விலை 7 யூரோக்கள். ஆனால், 1 லீட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை 4.5 யூரோக்கள் என்பதால், அங்கு இந்த சிறப்பு சலுகைக்காக வாடிக்கையாளர்கள் குறித்த மதுபான சாலையில் குவிந்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X