2024 மே 21, செவ்வாய்க்கிழமை

1.1 மில்லியனுக்கு ஏலம் போன டயானாவின் ஸ்வெட்டர்

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அரசர் சார்லசின் முதல் மனைவி டயானா 1997-ம் ஆண்டு கார் விபத்தில் தனது 36-ம் வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் இளவரசி டயானா பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் ஏலத்திற்கு வருவதும் அவை அதிக விலைக்கு ஏலம் வாங்கப்படுகின்றது.

அந்த வகையில் இங்கிலாந்து ஆடம்பர பின்னலாடை நிறுவனம் தயாரித்து இளவரசி டயானா அணிந்த சிகப்பு நிற ஸ்வெட்டர் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது.

1981-ம் ஆண்டு இளவரசர் சார்லசஸூடன் கோல்ப் போட்டி ஒன்றுக்கு டயானா இந்த ஸ்வெட்டரை அணிந்து சென்றிருந்தார். வரிசையாக வெள்ளை நிற ஆடுகள் படம் போட்ட இந்த ஸ்வெட்டரில் ஒன்று மட்டும் கருப்பு நிறத்தில் இருந்தது. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

1983-ம் ஆண்டு இந்த ஸ்வெட்டரை மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் டயானா அணிந்து சென்றிருந்தார். தற்போது அந்த ஸ்வெட்டர் ஏலத்திற்கு வந்த போது 1.1 மில்லியன் அமெரிக்கன் டொலருக்கு ஏலம் போனது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .