Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிரிய எதிரணியின் இறுதிப் பலம் வாய்ந்த இடமான வடமேற்கு சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில், குண்டுத் தாக்குதல் ஒன்றில் ஐந்து துருக்கிப் படைவீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து 101 சிரிய அரசாங்கப் படைவீரர்களைத் தாம் செயலற்றவர்கள் ஆக்கியதாக நேற்று துருக்கி தெரிவித்துள்ளது.
இட்லிப்பில் சிரிய நிலைகள் மீதான குண்டுத் தாக்குதல்களுடன் தமது படைகள் நேற்று மாலையில் முன்னேறுவதாக துருக்கி பாதுகாப்பமைச்சு கூறியுள்ளது.
எவ்வாறெனினும், துருக்கியின் மேற்படித் தகவலை உடனடியாக உறுதிப்படுத்த முடிந்திருக்கவில்லை.
ரஷ்யாவுடனான ஒப்பந்தமொன்றின் கீழ், எதிரணியிடமிருந்து இட்லிப்பை மீளக் கைப்பற்ற முயலும் சிரிய அரசாங்கப் படைகளின் வலிந்த தாக்குதலொன்றைத் தடுக்கும் முகமாக இட்லிப்பில் 12 கண்காணிப்புநிலைகளை துருக்கி கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், துருக்கியின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் சிரியப் படைகள் முன்னேறி வருகின்றன.
இச்சந்தர்ப்பத்திலேயே, தங்களது தகவல் மூலங்களின்படி 101 சிரிய அரசாங்கப் படைகள் செயலற்றதாக்கப்பட்டதாகவும், மூன்று தாங்கிகளும், இரண்டு கனொன்களும் அழிக்கப்பட்டதாகவும், ஹெலிகொப்டரொன்று தாக்கப்பட்டதாகவும் துருக்கி பாதுகாப்பமைச்சின் அறிக்கை தெரிவிக்கின்றது.
முன்னதாக, இட்லிப்பில் சிரிய அரசாங்கம் மேற்கொண்ட ஆட்லறித் தாக்குதலிலேயே ஐந்து துருக்கிப் படைவீரர்கள் நேற்றுக் கொல்லப்பட்டிருந்தனர். இத்தாக்குதலில் ஐந்து படைவீரர்கள் காயமடைந்துமிருந்த நிலையிலேயே இலக்குகளை அழித்து துருக்கி இராணுவம் பதிலளித்ததாக துருக்கி பாதுகாப்பமைச்சு மேலும் கூறியுள்ளது.
துருக்கியால் அண்மையில் மீளக் கைப்பற்றப்பட்ட தஃப்டனாஸ் பகுதியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றதாக, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago