2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை

S.Renuka   / 2025 ஜூன் 05 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (04) கையெழுத்திட்டார். 

தேசிய பாதுகாப்பை முன்னிட்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன். புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்களின் நுழைவு ஓரளவு கட்டுப்படுத்தப்படும். பயணக் கட்டுப்பாடுகள் முதலில் CBS செய்திகளால் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தடை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வரும் வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X