2025 டிசெம்பர் 27, சனிக்கிழமை

17 ஆண்டுகளின் பின்னர் திரும்பிய பங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவர்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 25 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷை நீண்ட காலமாக ஆண்ட ஸியா குடும்பத்தின் வாரிசான தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்த பின்னர் நாடு திரும்பியதாக அவரின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தெரிவித்துள்ளது.

இலண்டனுக்கு 2008ஆம் ஆண்டு சென்ற முன்னாள் பிரதமர் காலிதா ஸியாவின் மகனான ரஹ்மான், டாக்காவுக்கு இன்று சென்றிருந்தார்.

தேசியவாதக் கட்சியின் பதில் தலைவரான ரஹ்மானை வரவற்க இலட்சக்கணக்கானோர் விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னணி பிரதமர் வேட்பாளராக ரஹ்மான் காணப்படுகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X