2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

2 ஆண்டுகளுக்கு பின்னர் களை கட்டியது பீர் திருவிழா

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஜேர்மனியில் மிகப்பெரிய நாட்டுப்புற விழாவான ஒக்டோபர்ஃபெஸ்ட் என அழைக்கப்படும் ‘பீர் அருந்தும்‘  திருவிழாவானது கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாத் தொற்றுக் காரணமாக நடைபெறாமல் இருந்தது.

 
இந்நிலையில் இம்முறை  பவேரியா மாகாணத்தில் உள்ள முனிச் நகரத்தில் இத் திருவிழாத் கொண்டாட்டம் கோலாகலமாக அரம்பித்துள்ளது.
 
34.5 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் எனக் கூறப்படுகின்றது.

 3 நாட்கள் வரை நீடிக்கும் இத் திருவிழாவிற்கு பெருபாலான ஆண்கள் தோல் ஷார்ட்ஸ் (Leather ஷார்ட்ஸ்) உடைகளிலும் மற்றும் பெண்கள் dirndl எனப்படும் பாரம்பரிய ஆடை அணிந்து வருவார்கள்.

மேலும் இத்திருவிழாவின் போது  மக்கள் அனைத்து வகையான பீர்களையும் சுவைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X