S.Renuka / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
இதன் மூலம் சிங்கப்பூரில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் பின் அக்பர் ஹுசைன், பெயர் வெளியிடப்படாத மற்றொரு சிங்கப்பூர் நபர், மலேசியாவைச் சேர்ந்த சாமிநாதன் செல்வராஜு ஆகிய மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். நாளை புதன்கிழமை (03) அன்று நடைபெறும் விசாரணைக்கு முன்னதாக இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மிகவும் கடுமையான போதைப்பொருள் தடுப்புச் சட்டங்களைக் கொண்டுள்ளது. 15 கிராம் ஹெராயின் அல்லது 500 கிராம் கஞ்சா போன்ற குறிப்பிடத்தக்க அளவு போதைப்பொருட்களைக் கடத்துபவர்களுக்கு அங்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
தூக்கிலிடப்பட்ட சாமினாதன் கடந்த 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
ஆனால், அதை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இந்த மரண தண்டனை பெரும்பாலும் கீழ்மட்ட கடத்தல்காரர்களை மட்டுமே தண்டிப்பதாகவும், முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க விடுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
5 minute ago
20 minute ago
30 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
30 minute ago
35 minute ago