2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

220 பேரைக் கொன்று குவித்த ரஷ்யா

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 10 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களுக்கு மேலாகப்  போர் தொடுத்து வருகின்றது.

அதே சமயம் உக்ரேனும்  ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இப்போரில் உக்ரேனின் பெரும்பாலான பகுதிகளை  ரஷ்யப்  படைகள் கைப்பற்றியுள்ள நிலையில், அண்மைக்காலமாகக்  கைப்பற்றிய பகுதிகளை ரஷ்ய அரசு தம்முடன்  இணைத்து வருகின்றது.

இதனால் ஆத்திரமடைந்த உக்ரேன் இராணுவம், ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டெடுக்க ரஷ்ய படைகளுடன் தீவிரமாகப் போரிட்டு  வருகிறது.

அந்த வகையில் கார்கீவ் பிராந்தியத்தில் ரஷ்ய படைகள் வசம் உள்ள குப்யான்ஸ்க் நகரை மீட்டெடுக்க உக்ரேன் இராணுவம் முயன்றபோது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரேன் வீரர்கள் 220 பேர் கொன்று குவிக்கப்பட்டனர் என ரஷ்ய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X