2025 மே 15, வியாழக்கிழமை

3 வயது சிறுமிக்கு கென்சர்

Freelancer   / 2023 ஜூன் 27 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அவா போல்டன் என்ற 3 வயது சிறுமி நியூரோபிளாஸ்டோமா என்ற நோயால் அவதி அடைந்து வருகிறார். இது ஒரு வகையான புற்றுநோய் ஆகும். தற்போது நோயின் தாக்கத்தில் 4ஆம் நிலையை இவர் அடைந்துள்ளார்.

முன்னதாக, இந்த  குழந்தை அளவுக்கு அதிகமாக வாந்தி எடுத்த நிலையில், அது வைரஸ் காய்ச்சல் என்று குடும்பத்தினர் நினைத்துக் கொண்டனர்.  அவளுக்கு 5 வயது சகோதரன் இருக்கிறான். அந்த சிறுவன் உட்பட மொத்த குடும்பமும் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.

அவா போல்டனை பரிசோதித்த மருத்துவர்கள், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ரூ.2.6 கோடி ரூபாய் செலவாகும் என்றும், இதில் இருந்து மீண்டு வருவதற்கு 18 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். சிறுமியின் பெற்றோரான ஸ்காட் மற்றும் நடாலி போல்டன் ஆகியோரிடம் இவ்வளவு பெரிய தொகை இல்லாத நிலையில், ஆன்லைன் மூலமாக அவர்கள் உதவி கேட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .