2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

30,000 குழந்தைகளை உருவாக்கும் கருப்பை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 18 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய உலகில் தம்பதிகளின் கருத்தரிப்பு விகிதமானது குறைவடைந்து கொண்டு செல்வதால், குழந்தைகளைக்  பெற்றுக்கொள்ள தம்பதியினர் வாடகை தாய், செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு மாற்று வழிகளைத்  தேடி வருகின்றனர்.

இந்நிலையில் செயற்கை கருத்தரிப்பின் அடுத்த கட்டமாக ஜேர்மனியின் தலைநகரா  பெர்லினியில் செயற்பட்டு வரும் ‘EctoLife‘ எனும் நிறுவனம்  உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கி வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தாயின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் இக்கருப்பை வசதி மூலம், ஒரு வருடத்திற்கு  சுமார் 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் இதன் மூலம் மலட்டுத்தன்மையுள்ள பெற்றோருக்கு குழந்தைகள்  கருத்தரிக்கவும், உண்மையான உயிரியல் பெற்றோராக அவர்களை  மாற்றவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது புற்றுநோய் மற்றும் பிற சிக்கல்களால் கருப்பையை இழக்கும் பெண்களுக்கு ஒரு தீர்வாக  இது அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொழில் நுட்பத்தின் மூலம் வளரும் கருவிற்கு செயற்கை தொப்புள்கொடி மூலம் செறிவூட்டப்பட்ட சத்துக்களை அனுப்ப முடியும் எனவும், அதேபோல் குழந்தையின் கழிவுகளும் உரிய விதத்தில் அகற்றப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறையானது மக்கள் தொகை சரிவால் கவலையுறும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு  பெரிதும் உதவியாக அமையும் எனவும், இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 30,000 கருக்களை வளர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .