2025 மே 15, வியாழக்கிழமை

31 வயதில் கருவுற்று 92 வயதில் பிரசவம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 23 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவைச் சேர்ந்த 92 வயது முதிய பெண்மணிக்கு “கல்குழந்தை” (Stone baby) ஒன்று பிறந்துள்ளது. மருத்துவ மொழியில் இதனை லித்தோபீடியான் (lithopedion) என அழைக்கிறார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் 60 வருடங்களாக இந்த கருவை தனது வயிற்றில் சுமந்து வந்திருக்கிறார் மூதாட்டி.

1948-ம் வருடம். ஹூவாங் யூஜினுக்கு அப்போது 31 வயது. தான் கர்ப்பமாகவுள்ளோம் என மகிழ்ச்சியடைந்தாலும், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இது எக்டோபிக் கர்ப்பம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்படியென்றால், கருவுற்ற முட்டையானது கர்ப்பபைக்கு வெளியே வளர்வதையே இப்படி கூறுகிறார்கள்.

வழக்கமாக கரு முட்டையானது கருக்குழாயின் உள்ளே பொருந்தியிருக்கும். ஆனால் ஹூவாங் யூஜினுக்கு வெளியே வளர்ந்து வந்துள்ளது. இதுபோன்ற சமயங்களில் வளர்ந்து வரும் கருவானது அடிவயிற்றில் உள்ள பல்வேறு உறுப்புகளோடு இணைந்திருக்கும். சில சமயங்களில் கல்லீரல், குடல்களில் கூட இணைந்திருக்க வாய்ப்புள்ளது. இப்படி அடிவயிற்றில் உள்ள கரு இறப்பதில்லை என்றாலும், கருவுற்ற தாயிற்கும் அந்த குழந்தைக்கும் ஆபத்துள்ளதை மறுக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் குழந்தைகள் குறைபாடுகளோடு பிறக்க 21% வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .