2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

33 வயதில் பாட்டியான பெண்?

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


33 வயதே ஆன  பெண் ஒருவர்,  பாட்டியாக மாறியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 அமெரிக்காவின்  மிசூரி (Missouri )மாநிலத்தின் கன்சாஸ் (Kansas )என்னும் பகுதியை சேர்ந்தவர்  ரேச்சல் (Rachel Garrett Smith). 

33 வயதான ரேச்சல்  48 வயதான ஆடம் ஸ்மித் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆடமிற்கு இது இரண்டாவது திருமணம் எனவும் , அவரின் முதல் மனைவி மூலம் செரிடன் (Sheridan) என்ற ஒரு மகளும் ஆடமிற்கு இருப்பதாகக்  கூறப்படுகிறது. 

அத்துடன் தற்போது 25 வயதான செரிடன் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் குழந்தையையும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாவது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
இதன் காரணமாக ரேச்சல் 33 வயதிலேயே  தனது வளரப்பு மகளின் குழந்தைகளுக்கு பாட்டியாக மாறி உள்ளார்.

இந்நிலையில் இது குறித்துத் கருத்துத் தெரிவித்த ரேச்சல் , "இவ்வ்ளவு இளமையாக இருக்கும் போதே பாட்டியாக மாறுவேன் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் இதனை அறிந்து கொண்டதும் அதிகம் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் என்னுடைய வளர்ப்பு மகளான ஷெரிடனுடன் என்னை சேர்த்து பார்க்கும் பலரும் நங்கள் சகோதரிகள் என்றே நினைக்கின்றனர்.

நானும் ஆடமும் தற்போது குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டாம் என தான் முடிவு எடுத்துள்ளோம். அப்படி இருக்கும் போதே இரண்டு குழந்தைகளுக்கு பாட்டியாக மாறி உள்ளோம். இது மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாக உள்ளது” என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X