2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

4 முறை கருச்சிதைவு; 5ஆவது தடவை நடந்த அதிசயம்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவைச் சேர்ந்த ஆஷ்லே நெஸ் (Ashley Ness ) என்பவருக்கு, ஒரு மகள் மற்றும் இரண்டு வளர்ப்பு மகன்கள் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நான்கு முறை அடுத்தடுத்துக் கருவுற்ற  ஆஷ்லே நெஸ்  கருச்சிதைவு ஏற்பட்டதால் குழந்தை பெற முடியாமல் போயுள்ளது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ள அவருக்கு திடீரென ஒரு அதிர்ஷ்டம்  அடித்துள்ளது.

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்த ஆஷ்லே நெஸ்ஸுக்கு சமீபத்தில் ஒரே பிரசவத்தின் போது, நான்கு குழந்தைகளைப்  பெற்றெடுத்துள்ளார். எதிர்பார்க்கப்பட்ட நாளுக்கு, 12 வாரங்கள் முன்பாகவே அவர் இந்த நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

இதில் என்ன ஒரு அதிசயம் என்னவென்றால், நான்கு குழந்தைகளில் மொத்தம் இரண்டு இரட்டையர்கள் என்பதுதான்.  பொதுவாக , இரண்டு இரட்டை குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு பிறப்பது என்பது, ஒரு கோடியில் ஒருவருக்கே நிகழும் என்றும், அது மட்டுமில்லாமல் சில நேரம் அப்படி கூட இல்லாமல், மிக மிக அரிய வகையில் தான், இது போல ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் உருவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சுமார் 30 ஆண்டுகளாகப்  பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகையில், ஆஷ்லே நெஸ்ஸுக்கு நடந்தது மிகவும் ஆபத்தான கர்ப்பம் என்றும், தனது முப்பது ஆண்டுகால மருத்துவ பணியில் இப்படி கேள்விப்பட்டது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .