நபர் ஒருவர் பணிபுரியாமல் நான்கு வருடங்களாக ஊதியம் வாங்கி வரும் விநோத சம்பவம் ஜப்பானில் இடம்பெற்று வருகின்றது.
ஜப்பானைச் சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ (Shoji Morimoto). 36 வயதாகும் இவருக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் தேடி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவை அனைத்தையும் தவிர்த்து வந்த ஷோஜி, மிகவும் வித்தியாசமான வேலை ஒன்றை கையில் எடுத்துள்ளார்.
அதாவது மற்றவர்களுடன் நேரத்தினை செலவிடுவதன் மூலம் ஒரு கணிசமான தொகையை சம்மந்தப்பட்ட நபரிடம் இருந்தும் ஷோஜி சம்பளமாக வாங்கி வருகின்றார்.

உதாரணத்திற்கு குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு தனியாக செல்ல கூச்சமாக இருப்பவர்களுக்கு துணையாகச் செல்வது , பிறந்தநாளைத் தனியாக செலவழிக்கும் நபருடன் உடன் இருப்பது, , மனச் சுமைகளை இறக்கி வைக்க விரும்பும் நபர்களின் மனக் குமுறல்களை செவி கொடுத்து கேட்பது உள்ளிட்ட பல வேலைகளில் தான் ஷோஜி ஈடுபட்டு வருகிறார்.
அப்படி அவர்களுடன் இருக்கும் போது, அனைத்து செலவுகளையும் தான் சம்மந்தப்பட்ட நபர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக , சுமார் 69 பவுண்ட் வரை கட்டணமாகவும் ஷோஜி பெற்று வருகிறார்.
2018 ஆம் ஆண்டு, இதற்காக ட்விட்டர் கணக்கை தொடங்கிய ஷோஜி, எதுவும் செய்யாத மனிதர் (Do-nothing man) என்ற பட்டத்துடன் அறியப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார், இரண்டரை லட்சம் பேர் வரை, அவரை பின் தொடர்ந்து வரும் நிலையில், ஒரு நாளைக்கு சுமார் மூன்றில் இருந்து ஐந்து பேருக்கு வரை ஷோஜி சேவை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.