2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

500க்கும் மேற்பட்டோருக்கு தூக்குத் தண்டனை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 07 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக  அணியவில்லை எனக்  கூறி கைது செய்யப்பட்ட ‘மஹ்சா அமினி‘ என்ற இளம்பெண் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.

இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர்  தொடர்  போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இப்போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக செயற்பட்டதாகக் கூறி, பலருக்கு ஈரான் நீதிமன்றம்  தூக்கு தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈரானில் இவ்வாண்டில் (2022) மாத்திரம் சுமார்  500 க்கும் மேற்பட்டவர்கள்  ஈரானில் தூக்கிலிடப்பட்டுள்ளனர் எனவும், கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது அதிகபட்ச எண்ணிக்கை எனவும், முன்னதாக 2021 ஆம் ஆண்டு 333 பேர் தூக்கிலிடப்பட்டனர்  எனவும் மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நியாயமான விசாரணை இல்லாமல் இந் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மனித உரிமைகள் அமைப்பின்  இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகத்தம் கூறினார்.

மேலும்  மரணதண்டனைகள் மூலம் சமூகத்தில் அச்சத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ஈரான் அரசு இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X