2025 மே 15, வியாழக்கிழமை

60 ஆண்டுகளாக காத்திருந்த காதல்

Freelancer   / 2023 ஜூலை 17 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்த ஒரு பெண்ணை ஒருவர் காதலித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவருக்கும் இடையிலான காதல் நிறைவேறவில்லை. ஆனால், 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்டபோது, ​​இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.  வேகமாக தனது காதலைச் சொல்லி அதே பெண்ணை கரம்பிடித்திருக்கிறார் ஒரு மருத்துவர்.

 அமெரிக்கா  புளோரிடாவில் வசிக்கும் தோமஸ் என்ற மருத்துவர். மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, ​​நான்சி என்ற பெண்ணை காதலித்து  வந்துள்ளார்.  துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் அவர்களின் காதல் நிறைவேறவில்லை. இறுதியில் அவர்கள் பிரிந்தனர். ஆனால் சமீபத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வளவு நாள் ஆன பிறகும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த காதல் குறையவில்லை என்பதை இருவரும் உணர்ந்தனர். பின்னர் இருவரும் பல மணி நேரம் போனில் பேச ஆரம்பித்தனர். ஒரு நாள் இருவரும் சந்திக்க வேண்டும் என்று நான்சி சொல்ல, உடனடியாக  புளோரிடா பறந்தார் தோமஸ்.

 புளோரிடா விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், தாமஸ் நானிசியிடம் தனது காதலை சொல்வதற்காக முழங்கால் மண்டியிட்டு,  உடனே தனது விருப்பத்தை முன்மொழிந்தார். இதைப் பார்த்த நான்சி திகைத்துப் போனார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இந்த நெகிழ்ச்சி தருணத்தை​ டொக்டர் தாமஸின் பேஷண்ட் ஒருவர் பதிவு செய்து டிக்டாக்கில் பதிவேற்றியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த வீடியோ வைரலானது. உலகம் முழுவதும் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்து உணர்ச்சி வசப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .