2025 மே 15, வியாழக்கிழமை

60 வருடங்கள் கழித்து இணைந்த சகோதரிகள்

Freelancer   / 2023 ஜூன் 27 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 யார் என்றே தெரியாத இரண்டு பெண்மணிகள் தாங்கள் சகோதரிகள் என்பதை உணர்ந்து 60 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

இருவருக்குமே தனக்கொரு சகோதரி இருக்கிறார் என்பதை தெரியாமல் இருவரும் தங்களது வாழ்வை தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்துள்ளனர். தன்னுடைய மருமகனான ஜேசன் பிஷர் என்பவரின் முயற்சியின் காரணமாக, டிஎன்ஏ சோதனை செய்யும் வலைத்தளமான myheritage.com என்ற வலைத்தளத்தின் உதவியுடன் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு இருவரும் சகோதரிகள் என்பதனை உறுதி செய்துள்ளார்.

இவர்களின் தாயாரான லில்லியன் ஃபிஷர் என்பவர் 17 வயதாக இருக்கும் போது திருமணத்திற்கு முன்பே ஜூலி மாமோவை பெற்றெடுத்துள்ளார். சமுதாயத்தின் அழுத்தத்தின் காரணமாக தனது குழந்தையை தத்து கொடுத்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய வாழ்க்கையை செழுமையாக வாழ்ந்த பிஷர் மேலும் நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். 

அவர்களின் மூத்தவர் தான் ஜூலி ஆன்சல். இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அதே சமயத்தில் தத்து கொடுக்கப்பட்ட ஜூலி மாமோவை ஒன்பது நாள் குழந்தையாக இருக்கும்போது மாவிஸ் மற்றும் டேவிட் ஹாலண்ட் தம்பதியினர் தத்தெடுத்து கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்று அங்கு புதியதொரு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்நிலையிலேயே, இவ்விருவரும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .