Editorial / 2020 மார்ச் 09 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 57 சதவீதத்தால் அதிகரித்து 366ஆக நேற்று உயர்ந்துள்ளதுடன், COVID-19-ஆல் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 25 சதவீதத்தால் அதிகரித்து அங்கு 7,375 பேர் தற்போது COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிதாக COVID-19 தொற்றுக்குள்ளானோரால் தீவிர சிகிச்சை வசதிகளின் அதிகரித்து வரும் நெருக்கடியை எதிர்நோக்குகையில் லொம்பார்டியிலுள்ள சுகாதார அமைப்பானது தகருவதற்கான படிநிலையில் காணப்படுவதாக கொரிரே டெல்ல செரா பத்திரிகைக்கு லொம்பார்டி பிராந்திய நெருக்கடிப் பதிலளிப்பு பிரிவின் தலைவர் அன்டோனியோ பெஸென்டி தெரிவித்துள்ளளார்.
இதேவேளை, COVID-19-ஆனது எமது அயல் நாடுகளான மாலைதீவுகள், பங்களாதேஷ் உள்ளடங்கலாக 100 நாடுகள், பிராந்தியங்களுக்கு பரவியுள்ள நிலையில் 110,000க்கும் மேற்பட்டோர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இதில் 3,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் நேற்றைய முடிவில் 40 பேரே புதிதாக COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ள நிலையில், தகவல்களை ஆணைக்குழு இவ்வாண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி வெளியிட ஆரம்பித்த பின்னர் பதிவுசெய்யபட்ட குறைந்த எண்ணிக்கை இதுவாகும். அந்தவகையில் தற்போது சீனாவில் 80,735 பேர் COVID-19-ஆல் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய முடிவில் சீனாவில் 22 பேர் COVID-19-ஆல் இறந்துள்ள நிலையில் அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 3,119ஆக காணப்படுகிறது.
இதேவேளை, ஈரானில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 194ஆக நேற்று அதிகரித்துள்ளதுடன், அங்கு 6,566 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தென்கொரியாவில் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 7,478ஆக இன்று உயர்ந்துள்ளதாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான கொரிய நிலையங்கள் தெரிவித்துள்ள நிலையில் அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 51ஆக உயர்ந்துள்ளது.
3 minute ago
13 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
20 minute ago
24 minute ago