2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

’COVID-19-ஐக் கட்டுபடுத்த சீனாவைத் தவிர்ந்த ஏனைய நாடுகள் தயாரில்லை’

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவானது COVID-19-ஐக் கட்டுபடுத்த எடுத்த கடுமையான தனிமைப்படுத்தல், கட்டுப்பாடு நடவடிக்கைகளை புகழ்ந்துள்ள சீனாவுக்கு சர்வதேச நிபுணர்களை தலைமை தாங்கிச் சென்ற ப்ரூஸ் அய்ல்வோர்ட், ஏனைய நாடுகள் COVID-19-ஐக் கட்டுப்படுத்த தயாரில்லை என சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் நேற்றுத்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், COVID-19-ஆல் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது நேற்றைய முடிவில் 52ஆல் அதிகரித்து COVID-19-ஆல் சீனாவில் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிகையானது 2,715ஆக காணப்படுவதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது. இந்த 52 உயிரிழப்புகளும் COVID-19-இன் மய்யமான ஹுபெய் மாகாணத்திலேயே ஏற்பட்டுள்ளதுடன், ஹுபெய் மாகாணத்துக்கு வெளியே உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

இதேவேளை, COVID-19-ஆல் புதிதாகத் தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்ட 406 பேர் நேற்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில் சீனாவில் மொத்தமாக 78,064 பேர் COVID-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் ஹுபெய்யில் 401 தொற்றுக்குகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஹுபெய்க்கு வெளியே ஐந்து பேருக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்கொரியாவில் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ள 169 பேர் இன்று புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் தற்போது மொத்தமாக தென்கொரியாவில் 1,146 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர். புதிதாக COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளோரில் 134 பேர் தயெகு நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இங்குள்ள ஷின்செயோஞ்சி ஜீஸஸ் தேவாலயமொன்றின் கிளையே தென்கொரியாவில் COVID-19 பரவுவதுடன் தொடர்புபட்டுள்ளது.

இதேவேளை, தென்கொரியாவில் COVID-19-ஆல் 12ஆவது உயிரிழப்பு இன்று பதிவானதாக ஜீன்கங் இல்போ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 19ஆக இன்று அதிகரித்திருந்தது.

இதேவேளை, ஈரானின் பிரதி சுகாதார அமைச்சர் இராஜ் ஹரிர்ஷி, நாடாளுமன்ற உறுப்பினரொருவர் உள்ளடங்கலாக 139 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், COVID-19-ஆல் 11 பேர் நேற்று  வரையில் இத்தாலியில் உயிரிழந்துள்ளதுடன், 322 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X