2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

FIFA உலகக் கோப்பை: வானவில் ஆடை நபர் மர்ம மரணம்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

காற்பந்து ரசிகர்களின்  அபிமானத்தை வென்ற FIFA 2022  உலகக்கோப்பைத் தொடரானது கடந்த 20 ஆம் திகதி கட்டாரில்  கோலாகலமாக ஆரம்பமாகி விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 22ஆம் திகதி கத்தாரின் அல் ரியான் மைதானத்தில் அமெரிக்கா - வெல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

 இப்போட்டியைக்  காண அமெரிக்க பத்திரிக்கையாளர் கிராண்ட் வெல்ஹ் (48) அல் ரியான் மைதானத்திற்கு சென்றார்.

அவர் 'வானவில் நிற ஆடை' அணிந்து அமைதானத்திற்குள் செல்ல முயற்சித்ததால் அவரைப்  பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

'வானவில்  நிறக் குறியீடானது 'LGBT எனப்படும் நான்கு வகையிலான பாலின உறவு குறித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றது.

இதனால், பத்திரிக்கையாளர் கிராண்டை தடுத்து நிறுத்திய கத்தார் பொலிஸார் மைதானத்திற்குள் நுழைய வேண்டுமானால் வானவில் நிற ஆடையை கழற்றிவிட்டு வேறு உடை அணிய வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஆடையை மாற்றிய பின் கிராண்டை பொலிஸார் மைதானத்திற்குள் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக கிராண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கருத்து பதிவிட்டார். அவரது பதிவு உலக அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், அண்மையில் ஐகோனிக் மைதானத்தில் நடைபெற்ற அர்ஜெண்டினா - நெதர்லாந்து இடையேயான காற்பந்துப் போட்டியைக் காணச் சென்ற   கிராண்ட் வெல்ஹ், போட்டியை கண்டுகளித்துக்கொண்டிருந்தபோது  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

அதேவேளை கிராண்ட் வெல்ஹ்-ஐ கட்டார்  அதிகாரிகள் கொலை செய்துவிட்டதாக கிராண்டின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்த தீவிர விரசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X