Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 நவம்பர் 22 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் உள்ள `LGBTQ `இரவு விடுதியொன்றில் கடந்த 19 ஆம் திகதி மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று குறித்த விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் செல்ல முற்படுகையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில், தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ஆண்டர்சன் எனவும், அவருக்கு 22 வயது எனவும் தெரியவந்துள்ளது.
எனினும் இத்தாக்குதல் மேற்கொண்டமைக்கான காரணம் பற்றித் தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் இச்சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
2 hours ago