2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

காலி வித்தியலோகா கல்லூரி சம்பியனாக தெரிவு

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(நவம்)

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் 15 வயதுப் பிரிவினர்களுக்கு இடையே நடைபெற்ற, பிரிவு மூன்றுக்கான கிரிக்கெட்போட்டி இறுதி ஆட்டத்தில் காலி வித்தியலோகா கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் காலி வித்தியலோகா கல்லூரியும் நேற்று 29 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை பெற்றது.

மதுசன் 05 நான்குகளுடன் 32 ஓட்டங்களையும், சஜீவன் 20 ஓட்டங்களையும், பிருந்தாபன் 11 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 35 ஓட்டங்களும் பெறப்பட்டன.

காலி  வித்தியலோகா கல்லூரியைச் சேர்ந்த பதும் 10 ஓவர்கள் பந்து வீசி 03 ஓட்டமற்ற ஓவர்களுடன் 26 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும்- நிலும், இசும் ஆகியோர் தலா 10 ஓவர்கள் பந்து வீசி 03, 02 ஓட்டமற்ற ஓவர்களுடன் முறையே 16, 17 ஓட்டங்களைக் கொடுத்து தலா 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

128 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி வித்தியலோகா கல்லூரி 31.4 ஓவரில் 04 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

ஆகில்கிம்சன்கிலஹரா 76 பந்துகளில் ஆட்டமிழக்காது 06 நான்குகள் ஒரு ஆறுடன் 51 பத்தும் 29 ஓட்டங்களையும் லகிது 12 ஓட்களையும்  பெற்றதுடன் உதிரிகளாக 21 ஓட்டங்களும் பெறப்பட்டன.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிந்துஜன் 05 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவருடன் 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் மதுசன் 7.4 ஓவர்கள் பந்து வீசி 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

altalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .