Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நாற்பது வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி தங்கக் கிண்ணத் தொடரின் யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நாளை நடைபெறவுள்ளன.
நாளை கால 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் கலந்துக்கொள்வார்.
இப்போட்டிகளில் விருந்தினர்களாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவலகள் அமைச்சர் டபிள்யூ.டி.எ.செனிவரத்தன, பிரதி அமைச்சர் திலான் பெரேரா மற்றும் யாழ் மாவட்ட உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளாகள், உதவி அரசாங்க அதிபர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
தென்னிலங்கையில் இருந்து வருகை தந்துள்ள அரசாங்க அதிபர்களுடன் வடக்கு கிழக்கு மாவட்ட அரசாங்க அதிபர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026